×

ரோட்டில் குப்பையை வீசிய சாப்ட்வேர் இன்ஜினியருக்கு அதே குப்பையை பார்சல் செய்து திருப்பி கொடுத்த அதிகாரிகள்

திருவனந்தபுரம்: திருச்சூர் அருகே ரோட்டில் குப்பையை வீசிச்சென்ற சாப்ட்வேர் இன்ஜினியருக்கு அதே குப்பையை பார்சல் செய்து நகரசபை ஊழியர்கள் வீட்டில் கொண்டு கொடுத்தனர். மேலும் அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. கேரளாவில் பொது இடங்களில் அசுத்தம் செய்பவர்கள் மற்றும் குப்பைகளை வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் குப்பைகளை வீசினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

குப்பைகளை வீசுபவர்களை கண்காணிக்க ஆங்காங்கே ரகசிய கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் திருச்சூர் அருகே பொது இடத்தில் குப்பையை வீசிய ஒரு சாப்ட்வேர் இன்ஜினியருக்கு நகரசபை சார்பில் ஒரு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கப்பட்டது. இதுகுறித்த விவரம் வருமாறு: கடந்த சில தினங்களுக்கு முன் திருச்சூர் மாவட்டம் குன்னம்குளம் நகரசபை பகுதியில் ஒரு தூய்மைப் பணியாளர் அதை எடுத்துப் பார்த்தபோது அதில் வீட்டில் பயன்படுத்தப்பட்ட குப்பைகள் இருந்தன.

இதுகுறித்து அவர் நகரசபை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். நகரசபை அதிகாரிகளின் தீவிர விசாரணையில் குப்பையை வீசிச்சென்றவர் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் என தெரியவந்தது. தொடர்ந்து அவரது செல்போன் எண்ணும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போனில் சாப்ட்வேர் இன்ஜினியரை தொடர்பு கொண்ட நகரசபை அதிகாரிகள், உங்களுக்கு ஒரு கொரியர் வந்துள்ளது என்றும், முகவரி சரியாக இல்லாததால் முழு முகவரியை தெரிவிக்கும்படியும் கூறினர்.

அந்த சாப்ட்வேர் இன்ஜினியரும் தனக்கு ஏதோ ஒரு முக்கியமான பார்சல் வந்திருக்கும் என கருதி முகவரியை கூறியுள்ளார். சிறிது நேரத்திலேயே நகர சபை ஊழியர்கள் பார்சலுடன் அவரது வீட்டுக்கு சென்றனர். பார்சலை வாங்கிய அந்த சாப்ட்வேர் இன்ஜினியர் அதைப் பிரித்து பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். அதில் அவர் ரோட்டில் வீசிச்சென்ற குப்பைகள் இருந்தன.அதன் பிறகு தான் நகரசபை ஊழியர்களிடம் தான் வசமாக சிக்கிக் கொண்டதை அவர் உணர்ந்தார். பிரச்னையை அதோடு விட்டுவிடாமல் அந்த சாப்ட்வேர் இன்ஜினியருக்கு நகரசபை அதிகாரிகள் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.

The post ரோட்டில் குப்பையை வீசிய சாப்ட்வேர் இன்ஜினியருக்கு அதே குப்பையை பார்சல் செய்து திருப்பி கொடுத்த அதிகாரிகள் appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Thrissur ,Kerala ,
× RELATED வீட்டுக்கு தீ வைத்து கணவன் தற்கொலை: மனைவி, மகள் அலறி ஓட்டம்