கரூர், பிப். 14: தேசிய பாதுகாப்பான இணைய தின விழிப்புணர்வு கூட்டத்தில் செயலி, க்யூ ஆர் குறியீடு ஸ்கேன் செய்வதில் கவனம் தேவை, வங்கி விவரங்களை தனிநபரிடம் பகிரக்கூடாது என்று கலெக்டர் கூறினார். தேசிய பாதுகாப்பான இணைய தினத்தை முன்னிட்டு அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான விழிப்புணர்வு கூட்டம் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். இநத கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்துள்ளதாவது: தகவல் தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டினால் மக்களுக்கு ஏற்படும் தீமைகளை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. உலகளவில் இணைய பயனர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாளுக்கு நாள் இணைய வழிக் குற்றங்களும் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில, இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பிப்ரவரி மாதம் 11ம்தேதி உளகளவில் இணைய தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இணையத்தின் வளர்ச்சி இணையதள இணைப்பு உள்ள எவரும் அணுகக்கூடிய பல முக்கியமான சேவைகளுக்கு வழி வகுக்கிறது.பொதுமக்கள் தங்களுடைய கைபேசி எண்ணிற்கு வரும் ஒடிபி ஆதார், பான் அல்லது வங்கிக் கணக்கு விபரங்களை தேவையில்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளில் பயிரக்கூடாது. மேலும், ஆதாரமற்ற ஆதார் பரிவர்த்தனை அறிவிப்புகள் பற்றி கவனமாக இருக்க வேண்டும். கேஒய்சி புதுப்பிப்பு என்ற பெயரில் பான், ஆதார் அல்லது வங்கி கணக்கு விபரங்களை உங்களுக்கு தெரியாத நபர்களிடம் இருந்து வரும் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப்பில் உள்ள இணைப்பினை க்ளிக் செய்ய வேண்டாம்.
மேலும், தங்களுக்கு தெரியாத நபர்களிடம் இருந்து உங்களின் சுய விபரம் மற்றும் பணம் பற்றிய விபரங்களை கேட்டும் அழைப்புகளை தவிர்த்து விடுங்கள். பண பரிவர்த்தனையில் பொது க்ஆர் குறியீடு ஸ்கேன் செய்தல் மற்றும் ஒடிபி, பான் தகவல்களை பரிமாறுதலின் போது பண மோசடி செய்யும் நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். பொதுமக்கள் தங்களின் கைப்பேசிகளுக்கு டிராய் அல்லது தொலை தொடர்புத் துறையினரிடம் இருந்து அழை ப்பதாக வரும் குரல் அழைப்புகளின் அடிப்படையில் எந்த செயல்களையும் செய்வதை தடுக்க வேண்டும். பொதுமக்கள் வலைத்தளங்களில் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை பகிராதிருத்தல், தங்களுடைய எண் அடையாளத்தினை பாதுகாத்துக் கொள்ள வேண்டும. உண்மையான பார்சல் சேவை நிறுவனங்கள் முன்பதிவு செய்யாத பார்சலுக்கு ஒரு போதும் கட்டணம் வசூல் முதலீட்டு பரிந்துரைகளில் நம்பிக்கை வைக்க வேண்டாம்.
பொதுமக்கள் தங்களுடைய கைபேசியில் உள்ள செயலிகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் மதிப்பாய்வு செய்து தேவை இல்லாமல் வழங்கிய அனுமதிகளையும், நீண்ட நாட்களாக பயன்படுத்தாத செயலிகளையும் உங்கள் செல்போனில் இருந்து உடனடியாக நீக்கி விட வேண்டும்.எந்த ஒரு அரசாங்க நிறுவனமும் (காவல்துறை, மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை) ஒளிப்படம் அல்லது குரல் அழைப்புகளின் மூலம் உங்கள விசாரணை செய்யவோ, கைது செய்யவோ முடியாது. மேலும், பொது இடங்களில் அருகலை (வைபை) பயன்படுத்தி முக்கியமான தகவல்களை பரிமாறுதல் மற்றும் பணப் பரிவர்த்தனைகளை தவிர்க்க வேண்டும் என்றார்.
The post இணைய தின விழிப்புணர்வு கூட்டம்: செயலி, க்யூஆர் குறியீடு ஸ்கேன் செய்வதில் கவனம் தேவை appeared first on Dinakaran.