தூத்துக்குடி,பிப்.14: தூத்துக்குடி தபால்தந்தி காலனி பகுதியில் விளையாட்டு மைதானத்துடன் கூடிய பூங்கா அமைப்பது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி போன்ற மேற்கொள்ளும் வகையில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் மேலும் புதிதாக தார்சாலை, பாதாளசாக்கடை, மழைநீர் கால்வாய், கழிவு நீர்வு கால்வாய், தெருவிளக்கு மற்றும் குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் தபால் தந்தி காலனி பகுதியில் புதிதாக விளையாட்டு மைதானத்துடன் கூடிய பூங்கா அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி இப்பகுதியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், உதவி செயற்பொறியாளர் இர்வின் ஜெபராஜ், இளநிலைப்பொறியாளர் துர்காதேவி, திமுக பகுதி செயலாளர் ரவீந்திரன், மாநகராட்சி கவுன்சிலர் கண்ணன், வட்ட செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post தூத்துக்குடி தபால்தந்தி காலனியில் விளையாட்டு மைதானத்துடன் பூங்கா appeared first on Dinakaran.