×

ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் கிரித்தி, கல்யாணி

சென்னை: ஜெயம் ரவிக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளனர். அஹமத் இயக்கும் இறைவன், ராஜேஷ் எம். இயக்கும் பெயரிடப்படாத படம், சைரன் ஆகிய படங்களில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். இந்நிலையில் வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தை புவனேஷ் இயக்கத்தில், ஜெயம் ரவி நடிக்கிறார். இந்த படம் ரூ.100 கோடி செலவில் உருவாக உள்ளது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர்.

முதல் இரண்டு முதன்மை கதாபாத்திரத்துக்கு கல்யாணி பிரியதர்ஷன், கிரித்தி ஷெட்டி ஒப்பந்தமாகியுள்ளனர். மற்றொரு ஹீரோயினாக நடிக்க சில நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதேபோல் படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது. அதிக பொருட்செலவில் உருவாவதால், இதில் ஒரு பகுதி சரித்திர காலகட்டமாக வருகிறது என்றும் கூறப்படுகிறது. படப்பிடிப்பு ஜூலையில் ஐதராபாத்தில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

The post ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் கிரித்தி, கல்யாணி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kriti ,Kalyani ,Jayam Ravi ,Chennai ,Kriti Shetty ,Kalyani Priyadarshan ,Ahmed ,Rajesh M. Jayam Ravi ,Siren ,Wales International ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED வத்தலக்குண்டு குரும்பபட்டியில் வாழை நோய் தடுப்பு பயிற்சி