×

பொதுத்தேர்வு, அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை..!!

சென்னை: பொதுத்தேர்வு மற்றும் அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார். பாலியல் புகாரில் சிக்குபவர்கள் சில நாள் சஸ்பெண்ட் ஆகி ஜாமின் பெற்று வெளியே வந்துவிடுகின்றனர். மேலும், மற்றொரு பள்ளியில் பணியில் சேரக்கூடிய நிலை தற்போது காணப்படுகின்றது. இதனை முற்றிலும் தவிர்க்க பாலியல் புகாரில் சிக்குவோருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் விதிகளை திருத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க பணியாளர்களுக்கான புதிய விதிகள் குறித்து ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. பொதுத்தேர்வு மற்றும் அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது. மேலும், பள்ளிகளில் பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. மேலும், தமிழ்நாடு முழுவதும் 25,57,357 மாணவர்கள் இவ்வாண்டு பள்ளி பொதுத்தேர்வை எழுத உள்ளனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளது. 10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post பொதுத்தேர்வு, அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Anbil Mahesh ,Chennai ,
× RELATED கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்: அமைச்சர் அறிவுறுத்தல்