×

யுபிஎஸ்சி ஆன்லைன் விண்ணப்ப முறையில் மாற்றம்


புதுடெல்லி: ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு மற்றும் ஐஎப்எஸ் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி இறுதியில் வெளியானது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த 11ம் தேதியுடன் முடிய இருந்த நிலையில் வரும் 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்வுக்கான விண்ணப்பதாரர்கள் தொழில்நுட்ப கோளாறுகள் குறித்து புகார் அளித்ததைத் தொடர்ந்து யுபிஎஸ்சி ஆன்லைன் விண்ணப்ப முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒருமுறை பதிவில் சில தகவல்கள் திருத்தக் கூடியதாக மாற்றப்பட்டுள்ளது. மொபைல் எண்ணை மாற்றும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

The post யுபிஎஸ்சி ஆன்லைன் விண்ணப்ப முறையில் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : UPSC ,New Delhi ,IPS ,IFS ,Dinakaran ,
× RELATED கரூர் நெரிசல் விவகாரம் தொடர்பாக...