×

தி.நகர், வியாசர்பாடி கோட்டங்களில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சென்னை, பிப்.13: மின்வாரியம் வெளியிட்ட அறிக்கை: தி.நகர் மற்றும் வியாசர்பாடி கோட்டங்களில் பிப்ரவரி 14ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். தியாகராய நகர் கோட்டத்திற்கு கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, மெட்ரோ குடிநீர் நிலையம் அருகில் உள்ள 110 கி.வோ. வள்ளுவர் கோட்டம் துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள தி.நகர் கோட்ட இயக்கம் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளர் அலுவலகத்திலும், வியாசர்பாடி கோட்டத்திற்கு ராமலிங்கர் கோயில் எதிர்புரம் உள்ள 33/110 கி.வோ வியாசர்பாடி துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள இயக்கம் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளர் அலுவலகத்திலும் நடைபெறும்.

The post தி.நகர், வியாசர்பாடி கோட்டங்களில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Thi. Nagar ,Vyasarpadi ,Chennai ,Electricity Board ,Kodambakkam Highway ,Metro Water Supply Station ,Thiagarajanagara ,Thi ,. Nagar ,Vyasarpadi divisions ,Dinakaran ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்