×

விசைப்படகு மீனவர்கள் 3வது நாளாக ஸ்டிரைக்

தூத்துக்குடி, பிப். 13: தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் நேற்று 3வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் 260 விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. தூத்துக்குடி விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் விசைப்படகுகளுக்கு ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று 3வது நாளாக விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 260 விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. வேலை நிறுத்த போராட்டம் காரணமாக சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

The post விசைப்படகு மீனவர்கள் 3வது நாளாக ஸ்டிரைக் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Thoothukudi Boat Owners and Workers Federation ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி