நாசரேத், பிப். 13: தோப்பூர் பரிசுத்த லூர்து அன்னை ஆலய திருவிழாவில் சப்பர பவனி நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் பங்கிற்குட்பட்ட தோப்பூர் பரிசுத்த லூர்து அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது.திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது. 9ம் திருவிழா மாலை 6 மணிக்கு புனித லூர்து அன்னையின் சப்பர பவனி, இரவு 8 மணிக்கு திருவிழா சிறப்பு மாலை ஆராதனை நடந்தது. தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு ரவிபாலன் தலைமை வகித்தார். பிரகாசபுரம் பங்குத்தந்தை சலேட் ஜெரால்ட் வரவேற்றார். கள்ளிக்குளம் பங்குத்தந்தை மணி மறையுரை ஆற்றினார். பங்குத்தந்தைகள் தைலாபுரம் ராபின், நொச்சிக்குளம் ரத்தினராஜ், ஞானபிரகாசியார் பட்டினம் சகாயஜஸ்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளானோர் பங்கேற்றனர். 10ம் திருவிழா காலை 6.30 மணிக்கு திருவிழா திருப்பலி, சாத்தான்குளம் மறைவட்ட முதன்மை குரு செல்வஜார்ஜ் தலைமையில் நடந்தது. வள்ளியூர் பங்குத்தந்தை இசிதோர் மறையுரை ஆற்றினார். மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை பவனி ஆகியவை சவேரியார்புரம் பங்குத்தந்தை ரெமிஜியுஸ் தலைமையில் நடந்தது. தூத்துக்குடி பங்குத்தந்தை தாமஸ் மறையுரை ஆற்றினார். மன்னார்புரம் பங்குத்தந்தை நெல்சன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை பிரகாசபுரம் பங்குத்தந்தை சலேட் ஜெரால்ட் மற்றும் தோப்பூர் இறைமக்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.
The post தோப்பூர் ஆலய திருவிழாவில் லூர்து அன்னை சப்பர பவனி திரளானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.
