×

பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பட்டியல் உள்ளது : அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

சென்னை : பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பட்டியல் உள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். மாநில அளவிலான வானவில் மன்றப் போட்டிகள் மற்றும் அறிவியல் கண்காட்சி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 38 மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகள் வடிவமைத்த அறிவியல் சார்ந்த கண்காட்சிகளை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “தமிழ்நாட்டு கல்வி திட்டங்களுக்கான நிதியை விடுவிக்காமல் ஒன்றிய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை ஒன்றிய அரசு விடுவிக்க க வேண்டும். 40 லட்சம் மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு நிதியை விடுவிக்க வேண்டும். 2023-24-க்கான 4-ம் தவணை நிதி ரூ.249 கோடியை ஒன்றிய அரசு வழங்கவில்லை. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் 2023-24க்கான 4-ம் தவணை நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை. 2024-25-க்கான ரூ.2,152 கோடி நிதியை ஒன்றிய அரசு விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. ஒவ்வொரு முறையும் டெல்லி செல்லும் அண்ணாமலை பள்ளி மாணவர்களுக்கு நிதி பெற்றுத் தரலாமே. லட்சம் பள்ளி மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த திட்டத்தில் நிதி பெற்றுத்தரலாமே?. பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பட்டியல் உள்ளது. பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் விவாதிக்கப்படும். பள்ளிக்கல்வித் துறை தொடர்பாக ஆளுநர், அண்ணாமலை அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். பள்ளி மாணவர்கள் 10 லட்சம் பேரின் தரவுகளை எடுத்து அரசாங்கம் ஒரு அறிக்கை தரும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பட்டியல் உள்ளது : அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Ambil Mahesh ,Chennai ,Anbil Mahesh ,-level ,Rainbow Forum Competitions and Science Exhibition ,Anna Century ,Koturpur, Chennai ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...