வலங்கைமான், பிப். 12: வலங்கைமான் தாலுக்காவில் சம்பா அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இம்மாத இறுதிக்குள் 80 சதவீதம் அறுவடை பணிகள் முடிவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் உள்ள 71 வருவாய் கிராமங்கள் குடமுருட்டி ஆறு வெட்டாறு வெண்ணாறு மற்றும் முக்கிய பாசன வடிகால் ஆறான சுள்ளன் ஆறு மூலம் பாசன வசதி பெறுகின்றது. இவ் வருவாய் கிராமங்களில்முன்னதாக சுமார் 20 ஆயிரம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப் பட்டு சம்பாசாகுபடி மேற்கொள்ளப்பட்டது. முன்பட்ட சம்பா பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே வலங்கைமான் அடுத்த புலவர் நத்தம் பகுதியில் துவங்கியது. இருப்பினும் ஜனவரி மாதத்தில் சுமார் 20 சதவீத அளவு அறுவடைப் பணிகளை நடைபெற்றது. பிப்ரவரி மாதத்தில் 60% அறுவடை பணிகளும் மார்ச் முதல் வாரத்தில் 20% அறுவடை பணிகளும் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
வழக்கத்தைவிட தொட ர்ந்து கூடுதலாக வடகிழக்கு பருவமழை பெய்ததால் பயிர்களின் அறுவடைக்காலம் முன்னதாக தள்ளிப்போனது. இந்நிலையில் வலங்கைமான் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெய்த மழையின் காரணமாக அறுவடை பணிகள் தாமதமானது. வலங்கைமான் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா அறுவடை பணிகள் துவங்கி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. வழக்கமாக டெல்டா மாவட்டங்களில் சம்பா அறுவடை பணிகளின் போதுஇப்பகுதியில் உள்ள அறுவடை இயந்திரங்கள் மட்டுமல்லாது வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களிலிருந்து அறுவடை இயந்திரங்கள் அணிவகுப்பது வழக்கம். தேவைக்கு அதிகமான அறுவடை இயந்திரங்கள் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்து அறுவடைக்காக காத்து கிடக்கும் கடந்த ஆண்டு ஏற்பட்டது. ஒரேநேரத்தில் பெரும் விவசாயிகளின் வயல்களில் இரண்டுக்கும் மேற்பட்ட அறுவடை இயந்திரங்கள் அறுவடை பணிகளை மேற்கொண்ட நிலையும் ஏற்பட்டது.
மேட்டூர் அணை டெல்டா மாவட்டங்களை பாசனத்திற்கு உரிய நேரத்தில் திறக்கப்பட்டது. மற்றும் மாநிலம் முழுவதும் பெய்த தொடர் மழையால் சம்பா சாகுபடி பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக அறுவடை இயந்திரங்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் இடம்பெயறும் நிலை ஏற்படவில்லை. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 15 தேதிக்கு பிறகு அதிக அளவில் சம்பா அறுவடை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பிறகு சம்பா அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் சம்பா கதிர்களை வேட்டையாட வெளி மாநிலம் மற்றும் வெளிமாவட்ட பறவைகள் அதிக அளவில் வரவில்லை. இருப்பினும் இம்மாத இறுதிக்குள் என்பது சதவீதம் அறுவடை பணிகள் முடிவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post வலங்கைமான் தாலுகாவில் சம்பா அறுவடை இம்மாதம் 80 சதவீதம் நிறைவடையும் appeared first on Dinakaran.
