பழநி: பழநியில் தைப்பூசத்தையொட்டி கூட்ட நெரிசலை குறைக்க மலைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் சன்னதி வீதியில் இருந்து குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக யானை பாதையை அடையும் படியும், கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதையை பயன்படுத்தும் வகையிலும் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டிருந்தது. இந்நிலையில், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பழநி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய நேற்றிரவு வந்திருந்தார். திருஆவினன்குடி கோயிலில் இருந்து காவடி எடுத்தபடி படிப்பாதை வழியாக மலைக்கோயில் செல்வதாக தெரிவித்தார்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இது ஒருவழிப் பாதை என்பதால், குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக யானை பாதையில் செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால், படிப்பாதை வழியாகத்தான் செல்வோம் என பாஜவினர் பிடிவாதம் பிடித்தனர். போலீசார் தடுத்தும் அண்ணாமலை, மாவட்ட தலைவர் ஜெயராமன், முன்னாள் மாவட்ட தலைவர் கனகராஜ் உள்பட 15க்கும் மேற்பட்ேடாருடன் பக்தர்கள் கீழே இறங்கும் படிப்பாதை வழியாகவே மலைக்கோயிலுக்கு சென்றார். போலீஸ் தடுத்தும் பக்தர்களுக்கு இடையூறாக கீழே இறங்கும் படிப்பாதை வழியாக அண்ணாமலை காவடி எடுத்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
The post பக்தர்களுக்கு இடையூறு பழநியில் காவடியுடன் அண்ணாமலை அத்துமீறல்:போலீசார் தடுத்தும் பிடிவாதம் appeared first on Dinakaran.