×

திருவிதாங்கோடு பேரூராட்சியில் ₹22 லட்சத்தில் வளர்ச்சி பணி மனோ தங்கராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

தக்கலை, பிப்.12: திருவிதாங்கோடு பேரூராட்சியில் ரூ.22 லட்சத்தில் வளர்சிப் பணிகளை மனோ தங்கராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். திருவிதாங்கோடு பேரூராட்சிக்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சத்தில் புதிய வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து மனோ தங்கராஜ் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். இதில் திருவிதாங்கோடு பேரூராட்சி தலைவர் ரசீது, செயல் அலுவலர் சகாயமேரி சசிகலா, பள்ளி தலைமை ஆசிரியர் அக்பர் ஷாபி, தக்கலை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் அருளானந்த ஜார்ஜ், பேரூராட்சி துணை தலைவர் சுல்பத் அமீர், கவுன்சிலர்கள் சஹானா சுல்பி, தீப்தி செய்யது, முகமது றாபி, ஷாகுல், விக்னேஷ், செல்லதுரை, ஷெர்லின் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 லட்சத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் கட்டப்பட்ட பயணிகள் நிழலகம், ரூ.4 லட்சம் மதிப்பில் அழகியமண்டபத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழலகத்தையும் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்.

The post திருவிதாங்கோடு பேரூராட்சியில் ₹22 லட்சத்தில் வளர்ச்சி பணி மனோ தங்கராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Mano Thangaraj ,MLA ,Thiruvitangoda district ,Thakkala ,Mano Tangaraj ,Government Secondary School ,Thiruvankode Municipality ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி