- காங்கிரஸ்
- மேற்கு
- வங்காள சட்டமன்றத் தேர்தல்கள்
- முதல் அமைச்சர்
- மம்தா பானர்ஜி
- கொல்கத்தா
- காங்கிரஸ் கட்சி
- மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில்
- மேற்கு வங்கம்
- திரிணாமூல் காங்கிரஸ்
- மேற்கு வங்கம்...
- வங்காள சட்டமன்றம்
- தின மலர்
கொல்கத்தா: அடுத்தாண்டு நடக்கும் மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்றும் வரும் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து நின்று வெற்றி பெறும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்தார். மேற்கு வங்க சட்டமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் நேற்று தொடங்கியது. பட்ஜெட் கூட்ட தொடருக்கு முன் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘வரும் சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் உள்ளிட்ட வேறு எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும். மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு இல்லை.
திரிணாமுல் கட்சி தனித்து போட்டியிட்டு 4வது முறையாக ஆட்சி அமைக்கும்’’ என பேசியதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். சில அமைச்சர்கள் கூறுகையில், டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றி பெற காங்கிரஸ் உதவவில்லை. அரியானாவில் காங்கிரஸ் வெற்றிக்கு ஆம் ஆத்மி உதவவில்லை. இரண்டு மாநிலங்களிலும் 2 கட்சிகளும் சேர்ந்திருந்தால் தேர்தல் முடிவுகள் வேறு விதமாக அமைந்திருக்கும் என மம்தா பானர்ஜி பேசினார் என்றனர்.
மேற்கு வங்கத்தில் கடந்த 2011 முதல் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அடுத்தாண்டு மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலிலும் காங்கிரசுடன் கூட்டணி அமைக்காமல் மம்தா கட்சி தனித்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
The post மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரசுடன் கூட்டணி இல்லை; முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு appeared first on Dinakaran.