×

கரூர் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல்: எர்ணாகுளம் காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம்

திருச்சி: கரூர் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் எர்ணாகுளம்-காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. கரூர் அருகே திருக்காப்புலியூர்
பகுதியில் திருச்சி – கரூர் ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு உடைப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கொடுத்த தகவலின்படி அப்பகுதிக்கு வந்த ரயில்வே ஊழியர்கள் பணியில் ஈடுபடும் நேரத்தில் எர்ணாகுளம் – காரைக்கால் விரைவு ரயில் 100 மீட்டர் தூரத்தில் வருவதை அறிந்து சிவப்பு கொடியை அசைத்து விரைவு ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்ட நிலையில் அந்த பகுதிக்கு அருகே உள்ள ரயில்வே ஓய்வு பெற்ற ஊழியர் காலை கடன் கழிப்பதற்காக சென்ற நிலையில் விரிசல் ஏற்பட்டதை தெரியவந்தது. இதை தொடர்ந்து ஈரோடு – திருச்சி, திருச்சி- ஈரோடு, வேளாங்கண்ணி உள்ளிட்ட விரைவு ரயில்கள் அந்தந்த ரயில்வே நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு 40 நிமிட காலதாமதத்துடன் சென்றது. ரயில்வே தண்டவாளங்களில் உடைப்பு ஏற்பட்டதை குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post கரூர் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல்: எர்ணாகுளம் காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Karur ,Ernakulam Karaikal Express ,Trichy ,Ernakulam ,Trichi-Karur ,Thirukkapuliur ,Ernakulam Karaikal Express Train ,Dinakaran ,
× RELATED என்னுடைய படம் கூடதான் 4 வருஷமா...