×

கொக்குமடையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

அறந்தாங்கி, பிப். 11: அறந்தாங்கி அடுத்து கொக்குமடையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை புதுக்கோட்டை மாவட்ட கல்லணை கால்வாய் பாசன தாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத் தலைவர் ரமேஷ் திறந்து வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா பகுதியில் நூற்றுக்கணக்கான நில ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் கொக்குமடை கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை புதுக்கோட்டை மாவட்ட கல்லணை கால்வாய் பாசன தாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத் தலைவர் கொக்குமடை ரமேஷ் திறந்து விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சுப்பிரமணியன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ரபீக் முகமது, சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதற்கு கொக்குமடை இடையாத்தூர், பிராமணவயல் சிலாதண்ணி, வேதியன்குடி சோழனி, நீர்விலங்குளம் குடி கூம்பள்ளம், திருநெல்லிவயல் ஆகிய பகுதியை சேர்ந்த விவசாயிகள் நன்றி தெரிவித்து உள்ளனர்.

The post கொக்குமடையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Kokkumadai ,Aranthangi ,Ramesh ,President ,Pudukottai District Kallanai Canal Irrigation Farmers' Coordinating Association ,Manamelkudi taluka ,Pudukottai district… ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா