ஓசூர், பிப்.11: ஓசூர் மாசாணி அம்மன் கோயில் மயான கொள்ளை திருவிழாவை முன்னிட்டு, திரளான பக்தர்கள் அம்மன் வேடம் அணிந்து ஊர்வலமாக சென்றனர். ஓசூர் சமத்துவபுரத்தில் உள்ள மாசாணி அம்மன் கோயில் மயானக்கொள்ளை திருவிழா, கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினசரி அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. நேற்று தேர்ப்பேட்டையில் உள்ள பச்சம்குளம் அருகே பக்தர்கள் அலகு குத்திக்கொண்டும், பல்வேறு அம்மன் வேடம் அணிந்தும், பூகரகம் மற்றும் பால்குடம் எடுத்து மேள தளாங்களுடன் ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
The post ஓசூரில் மாசாணியம்மன் கோயில் திருவிழா பக்தர்கள் ஊர்வலம் appeared first on Dinakaran.