தேனி, பிப். 11: போடி நகர் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் சேதுராம்(61). இவர் நேற்று முன்தினம் கொடுவிலார்பட்டியில் இருந்து பழநிக்கு பாதயாத்திரையாக சென்ற 80 பேர் கொண்ட பக்தர்கள் குழுவினருடன் இணைந்து சென்றார். பாதயாத்திரையாக இக்குழுவினர் ஒருவர் ஒருவராக பெரியகுளத்தில் இருந்து மதுரை சாலையில் சென்றனர்.
இவர்கள் பெரியகுளத்தை அடுத்துள்ள அரசினர் தோட்டக்கலைக்கல்லூரி முன்பாக சென்று கொண்டிருந்தபோது, இவர்களுக்கு பின்னால் வந்த அரசு பஸ் ஒன்று நடந்து சென்ற பக்தர் சேதுராம் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சேதுராம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பாதயாத்திரையாக சென்ற கொடுவிலார்பட்டியை சேர்ந்த ஜெயராமன்(55) அளித்த புகாரின்பேரில் பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பஸ் மோதி பக்தர் சாவு appeared first on Dinakaran.
