திண்டுக்கல், பிப். 11: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று 24 மணி நேர தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் ராசாத்தி வரவேற்றார். மாவட்ட செயலாளர் சுகந்தி கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். நகர தொழிற்சங்க இணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் துவக்கரையாற்றினார். போராட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வர வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகை, அகவிலைப்படி நிலுவை, சரண்டர் உள்ளிட்ட பண பயன்களை வழங்க வேண்டும்.
சத்துணவு மற்றும் அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலளர்கள், ஊர் புற நூலகர்கள், எம்ஆர்பி செவிலியர்கள், கணினி உதவியாளர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம், தொகுப்பு ஊதியம், மதிப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். அரசு துறையில் உள்ள காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
The post தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.
