×

சாத்தான்குளம் வட்டாரத்தில் விவசாயிகள் விவரம் சேகரிப்பு துவக்கம்

சாத்தான்குளம், பிப்.11 : சாத்தான்குளம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் சுதா மதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேளாண்மை ஆடுக்கம் என்ற இணையதளத்தின் மூலம் விவசாயிகள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கும் முகாம் 9ம் தேதி துவங்கியுள்ள நிலையில் தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. விவசாயிகள் குறித்த தரவுகளான பட்டா, ஆதார் எண் மற்றும் பிற விவரங்கள் வேளாண்மை ஆடுக்கம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு ஒவ்வொரு விவசாய நில உடைமை யாளர்களுக்கும் ஒரு அடையாள எண் வழங்கப்படும். இனி வரும் காலங்களில் வேளாண் துறை சார்ந்த திட்ட பலன்கள் இந்த எண் வாயிலாகவே வழங்கப்படும். எனவே சாத்தான்குளம் வட்டார விவசாயிகள் முகாம் நடைபெறும் கிராமங்களுக்கு சென்று தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்து அடையாள எண்ணை பெற்று பயனடையலாம் மேலும் விவரங்களை சாத்தான்குளம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில். அணுகி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post சாத்தான்குளம் வட்டாரத்தில் விவசாயிகள் விவரம் சேகரிப்பு துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Sathankulam district ,Sathankulam ,Assistant Director of Agriculture ,Sudha Mathi ,Agriculture Aadukkam ,Dinakaran ,
× RELATED விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி முகாம்