×

எச்.ராஜாவை தே.பா சட்டத்தில் கைது செய்ய கமிஷனரிடம் மனு

மதுரை: மக்கள் கலை இலக்கிய கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம், விசிக, திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் நேற்று கொடுத்த புகார் மனுவில், திருப்பரங்குன்றத்தில் நடந்த இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜவின் மூத்த தலைவர் எச்.ராஜா, ‘அயோத்தி பாபர் மசூதி போன்று திருப்பரங்குன்றம் மாறும்’ என பேசியுள்ளார். நீதிமன்ற உத்தரவை மீறி இந்து முன்னணி, பாஜவினர் இஸ்லாமியர்களுக்கு எதிராக பிரசாரம் செய்தனர். பொதுமக்கள், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசிய எச்.ராஜா மற்றும் இந்து முன்னணியினரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும் என கூறியுள்ளனர்.

The post எச்.ராஜாவை தே.பா சட்டத்தில் கைது செய்ய கமிஷனரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : H. Raja ,Madurai ,People's Arts and Literature Association ,State Coordinator ,Ramalingam ,Vishik ,Dravidar Kazhagam ,Commissioner ,Loganathan ,BJP ,Hindu Munnani ,Thiruparankundram… ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...