×

கூட்டணியை முறித்தது கெஜ்ரிவால் தான்: காங்கிரஸ் விளக்கம்


புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம்ஆத்மி, காங்கிரஸ் தனித்து போட்டியிட்டதால் பா.ஜ வெற்றி பெற்றது. இதனால் இந்தியா கூட்டணி தலைவர்கள் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தனர். இதற்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் நேற்று விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில்,’ டெல்லியில் கூட்டணி முறிவு குறித்த கேள்விகளை இந்தியா கூட்டணி தலைவர்கள் எங்களிடம் தவறாக வைக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் டெல்லியில் கூட்டணியை உடைத்த ஒருவரிடம் கேட்க வேண்டும்.

டிசம்பர் 1 அன்று டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக கெஜ்ரிவால் அறிவித்தார். இதை எங்கள் கூட்டணி கட்சிகளும் புரிந்துகொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். காங்கிரஸை திமிர்பிடித்தவர்கள் என்று சிலர் விமர்சனம் செய்கிறார்கள். நாங்கள் பணிவாகவும் கண்ணியமாகவும் இருக்கிறோம், அதனால்தான் அவர்கள் பேசுகிறார்கள், நாங்கள் அமைதியாக இருக்கிறோம்’ என்றார்.

The post கூட்டணியை முறித்தது கெஜ்ரிவால் தான்: காங்கிரஸ் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,Congress ,New Delhi ,BJP ,Delhi Assembly elections ,Aam Aadmi Party ,Bharatiya Janata Party ,Congress party ,Manickam Thakur ,
× RELATED டெல்லியில் உள்ள எய்ம்ஸ்...