×

கருவை கலைத்ததால் 16 வயது சிறுமிக்கு உடல்நிலை பாதிப்பு: போலீசார் விசாரணை

சென்னை: வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் கவிதா 36 (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு 16 வயதில் மகள் உள்ளார். இவர் அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.‌ கொளத்தூரை சேர்ந்த சஞ்சய் என்ற நபரை கடந்த 7 மாதமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர். இந்நிலையில், சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தாய் கவிதாவிற்கு இந்த விஷயம் தெரிய வரவே சிறுமிக்கு கருவை கலைக்கும் மாத்திரையை வாங்கிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுமிக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டு நேற்று முன்தினம் ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து மருத்துவமனை சார்பில் எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கருவை கலைத்ததால் 16 வயது சிறுமிக்கு உடல்நிலை பாதிப்பு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kavitha ,Vyasarpadi ,
× RELATED ஜனப்பசத்திரம், அழிஞ்சிவாக்கம்...