×

சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் டிடிஆரின் டிக்கெட் பரிசோதனை மிஷினை திருடிய வாலிபர் கைது

சென்னை: சென்னை வந்த வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் டிடிஆரிடம் இருந்து டிக்கெட் பரிசோதனை மிஷினை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். சென்னை கொருக்குப்பேட்டை-வியாசர்பாடி ரயில் நிலையத்துக்கு இடையே கடந்த 4ம் தேதி வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை வழியாக டாட்டா நகர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது, எஸ்-1 கோச்சில் பணியில் இருந்த டிடிஆரின் டிக்கெட் செக் பண்ணும் மிஷினை ஒரு வாலிபர் திருடிக் கொண்டு ரயிலில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் கொருக்குப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த வாலிபரை தேடி வந்தனர். நேற்று முன்தினம் இரவு மீனம்பாள் நகர் மேம்பாலம் அருகில் பதுங்கி இருந்த கொருக்குப்பேட்டை மீனம்பாள் நகர் 6வது தெருவை சேர்ந்த சதீஷ் என்கின்ற எட்டப்பன் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், திருவொற்றியூர் பகுதியில் இருசக்கர வாகனங்கள் வாட்டர் வாஷ் செய்யும் வேலை செய்து வருவதும், எட்டப்பன் மீது ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. பிறகு கைது செய்யப்பட்ட எட்டப்பனிடமிருந்து மிஷினை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் டிடிஆரின் டிக்கெட் பரிசோதனை மிஷினை திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Korukkupettai- ,Vyasarpadi railway station ,Vyasarpadi ,Korukkupettai… ,
× RELATED சென்னை பள்ளிகளில் செயல்படும்...