சென்னை: தி.நகர், தர்மாபுரம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு இடத்தில் கடந்த 2018ம் ஆண்டு ஒரு அறையை வாடகை எடுத்து பீகாரைச் சேர்ந்த ராஜிவ்யாதவ், அமர்நாத் யாதவ் உட்பட 5 பேர் தங்கியிருந்தனர். கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 28ம் தேதி இரவு, ராஜிவ் யாதவை, 4 பேர் கொலை செய்து விட்டு தப்பினர். இது தொடர்பாக பாண்டி பஜார் வழக்கு பதிந்த பீகார் மாநிலம், தர்பங்கா மாவட்டத்தை சேர்ந்த அமர்நாத் குமார் யாதவ் (21) உட்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில், அமர்நாத் குமார் யாதவ் ஜாமீனில் வெளியே வந்து, வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானதால், அவரை கைது செய்ய, நீதிமன்றம் கடந்த 2021ம் ஆண்டு பிடியாணை பிறப்பித்தது. அதன்பேரில், திருவள்ளூர் மாவட்டத்தில் பதுங்கியிருந்த அமர்நாத் குமார் யாதவை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post 5 ஆண்டாக தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி கைது appeared first on Dinakaran.