×

தாயை பற்றி அவதூறு பேசியதால் மது, பிரியாணி வாங்கி கொடுத்து நண்பனை வெட்டிய வாலிபர்: அயனாவரத்தில் பரபரப்பு

பெரம்பூர்: மது அருந்தியபோது தாயை பற்றி அவதூறாக பேசிய நண்பருக்கு பிரியாணி, மது வாங்கிக் கொடுத்து கத்தியால் சரமாரியாக வெட்டி வாலிபரை போலீசார் கைது செய்தனர். அயனாவரம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ஹமீதுல்லா என்கிற நானா மியாவ் (29). இவர் தனது நண்பரான ஓட்டேரி தாசமகான் தர்கா தெருவைச் சேர்ந்த அக்பர் அலி பசுலு என்கிற இர்பான் (21) என்பவருடன் நேற்று முன்தினம் இரவு அயனாவரத்தில் ஒன்றாக மது அருந்தி உள்ளார். அப்போது, இர்பான் தாய் குறித்து ஹமீதுல்லா தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிகாலை 2 மணி அளவில் இர்பான், ஹமீதுல்லாவை அழைத்துக் கொண்டு புளியந்தோப்பு பகுதிக்கு வந்து பிரியாணி வாங்கி கொடுத்துள்ளார். பிறகு மீண்டும் மது குடித்துள்ளனர்.

அப்போது புளியந்தோப்பு விஓசி நகர் 6வது தெருவில் உள்ள ஒரு கம்பெனிக்கு சென்று இருவரும் தூங்கி உள்ளனர். திடீரென நேற்று காலை 8 மணி அளவில் இர்பான் தான் வைத்திருந்த ஆடு வெட்டும் கத்தியால் ஹமீதுல்லாவை சரமாரியாக வெட்டியுள்ளார். அப்போது அதனை தடுக்க வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ரத்தன் என்பவருக்கும் வெட்டு விழுந்துள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து ஹமிதுல்லாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று ஓட்டேரி தாசமகான் பகுதியைச் சேர்ந்த இர்பானை கைது செய்தனர். அவரிடமிருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு சிறையில் அடைத்தனர்.

The post தாயை பற்றி அவதூறு பேசியதால் மது, பிரியாணி வாங்கி கொடுத்து நண்பனை வெட்டிய வாலிபர்: அயனாவரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Ayanavaram ,Perambur ,Hamidullah ,Nana Miao ,Mettu Street, Ayanavaram ,
× RELATED கஞ்சா கடத்தி வந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த மூவர் கைது