×

பிரஜா ராஜ்யம் உருமாறி ஜனசேனா கட்சியாக உள்ளது; நடிகர் சிரஞ்சீவி தகவல்

திருமலை: தெலுங்கு பட உலகின் மெகா ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் சிரஞ்சீவி, கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த ஆந்திர அரசியலுக்கு வந்தார். பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை தொடங்கி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். இதில் 18 பேர் வெற்றி பெற்றனர். இருப்பினும் சில அரசியல் சூழ்நிலை காரணமாக தனது கட்சியை காங்கிரசில் இணைத்துவிட்டு அவர் ராஜ்யசபா எம்பி ஆனார். கடந்த 2014ம் ஆண்டில் மாநில பிரிவினைக்கு பிறகு அவரது தம்பியான நடிகர் பவன்கல்யாண், ஜனசேனா கட்சியை தொடங்கினார்.

கடந்த ஆண்டு பாஜக, தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமோக வெற்றி பெற்று தற்போதைய ஆந்திர துணை முதல்வராக பவன்கல்யாண் உள்ளார்.இந்நிலையில் ஐதராபாத்தில் நேற்றிரவு நடந்த திரைப்பட விழாவில் நடிகர் சிரஞ்சீவி பங்கேற்று பேசுகையில், `ஆரம்பத்தில் பிரஜா ராஜ்யம் கட்சியை நான் 18 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினேன். காலப்போக்கில் எனது கட்சி தற்போது ஜனசேனா கட்சியாக உருமாறியுள்ளது. இது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் நடிகர் சிரஞ்சீவி நேரடி அரசியலில் ஈடுபடாமல் தனது தம்பியின் மூலம் அரசியல் நடத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

The post பிரஜா ராஜ்யம் உருமாறி ஜனசேனா கட்சியாக உள்ளது; நடிகர் சிரஞ்சீவி தகவல் appeared first on Dinakaran.

Tags : Praja ,Rajyam ,Janasena ,Chiranjeevi ,AP ,Praja Rajyam ,Assembly elections ,
× RELATED புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான...