சென்னை: வேங்கை வயல் விவகாரத்தில் ‘‘ஒரு நபர் விசாரணை ஆணையம்” அமைக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஏழுதி உள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் முதலமைச்சருக்கு அனுப்பிய கடிதம்: கடந்த நான்கு ஆண்டுகளாகப் பட்டியல் சமூக மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக புரட்சியாளர் அம்பேத்கர், பண்டிதர் அயோத்திதாசர் பெயரிலான திட்டங்கள் உட்பட தாங்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை.
மேலும் பட்டியல் சமூகத்தினரை வணிகர்களாக வளர்த்தெடுக்கும் வகையில் பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் வணிக வளாகங்களை அமைத்துத் தருவதற்குத் திட்டம் ஒன்றை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். சாதிய வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த சட்டப்பூரவமான வமான உறுதிமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர்களையே குற்றவாளிகள் என சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பது அம்மக்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
பெரும் அதிர்ச்சிக்குள்ளான அக்கிராமத்து மக்கள், குற்றப்பத்திரிக்கையைத் திரும்பப் பெற வேண்டுமெனவும் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும் வலியுறுத்தி தங்களின் குடியிருப்புப் பகுதியிலேயே அமைதியான முறையில் தொடர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றவர். எனவே, தற்போது சிபிசிஐடி தாக்கல் செய்திருக்கும் குற்ற அறிக்கையை இறுதியாகக் கருதாமல், இது தொடர்பாக தீர விசாரித்து உண்மையைக் கண்டறிய ஏதுவாக, நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டுமாறு கோருகிறோம். அதாவது, ஓய்வுப்பெற்ற உயர்நீதிமன்ற அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் ‘‘ஒரு நபர் விசாரணை ஆணையம்” ஒன்றை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post வேங்கை வயல் விவகாரத்தில் ‘‘ஒரு நபர் விசாரணை ஆணையம்’’ அமைக்க வேண்டும்: திருமாவளவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் appeared first on Dinakaran.