×

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி!

சென்னை: டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்து, கட்டடத்திற்கு ‘எம்ஜிஆர் – ஜெயலலிதா மாளிகை’ என எடப்பாடி பழனிசாமி பெயர் சூட்டினார். இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சென்னை, தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று (10.2.2025 – திங்கட் கிழமை), “புதுடெல்லி, M.B.ரோடு, இன்ஸ்டிட்யூஷனல் ஏரியா, புஷ்ப் விஹார், செக்டார் VI, பிளாட் எண்கள். 15 & 22″ என்ற முகவரியில் புதிதாகக் கட்டப்பட்ட புதுடெல்லி கழக அலுவலகமான “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித் தலைவி அம்மா மாளிகை”-யை காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

 

The post டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி! appeared first on Dinakaran.

Tags : EDAPPADI ,PALANISAMI ,DELHI ,Chennai ,Edappadi Palanisami ,MGR ,Jayalalitha Manalitha ,Adimuga ,General Secretary of the Association ,
× RELATED என்னை சந்திக்காமல் ஏன் தவிர்க்கிறார்...