×

நிலக்கோட்டை ஒன்றிய பகுதிகளில் கலைஞர் கனவு இல்ல திட்ட வீடுகள் கட்டுமான பணிகள்

*ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ஆய்வு

நிலக்கோட்டை : நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றித்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழக அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி மற்றும் துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

இதன்படி நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், கலைஞரின் கனவு இல்லம், பிரதம மந்திரி அவாஸ் யோஜனா, 15வது மத்திய நிதி ஆணையம் உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்ப பணிகளை அவர்கள் பார்வையிட்டனர்.

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், பிள்ளையார்நத்தம் ஊராட்சி, பெருமாள்பட்டி கிராமத்தில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் வளர்ப்பு திட்டம், 15வது மத்திய நிதி ஆணைய நிதி ரூ.7.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி, குல்லலக்குண்டு ஊராட்சி, சிங்கம்பட்டியில் ரூ.1.41 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிடைமட்ட ஊறவைக்கும் குழிகள் அமைத்தல் பணிகளை பார்வையிட்டு அவற்றை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறினர்.

மேலும், அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தலா ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் உருவாகும் வீடுகளின் கட்டுமான பணிகள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், தலா ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீடுகள், ஊரக குடியிருப்புகள் பழுது பார்க்கும் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், ரூ.5.69 லட்சம் மதிப்பீட்டில் உருவாகும் பொது சுகாதார வளாகம், மயான பகுதியில் ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாலை, தண்ணீர் வசதி போன்ற பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, வாட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post நிலக்கோட்டை ஒன்றிய பகுதிகளில் கலைஞர் கனவு இல்ல திட்ட வீடுகள் கட்டுமான பணிகள் appeared first on Dinakaran.

Tags : Kalaignar Kavanu Illa ,Nilakottai ,District Rural Development Agency ,Thilagavathy ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத குவாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?: ஐகோர்ட் கிளை கேள்வி