×

பெரியார் அவமதிப்பு வழக்கு: நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு போலீஸ் சம்மன்

சென்னை: தந்தை பெரியார் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது. வடலூர் காவல் நிலையத்தில் ஜனவரி 9-ம் தேதி பதிவுசெய்யப்பட்ட வழக்கில் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. கடலூர் மாவட்டம் வடலூரில் ஜனவரி 8-ம் தேதி தந்தை பெரியார் பற்றி அவதூறான வகையில் சீமான் பேசியதை அடுத்து வழக்கு தொடரப்பட்டது. சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் பங்களா வீட்டில் வடலூர் -போலீசார் சம்மனை வழங்கினர். வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஆஜராகும்படி சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

The post பெரியார் அவமதிப்பு வழக்கு: நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு போலீஸ் சம்மன் appeared first on Dinakaran.

Tags : Periyar ,NDA ,Seeman ,Chennai ,Vadalur ,Vadalur, Cuddalore district… ,
× RELATED பெரியார் குறித்து சர்ச்சை பேச்சால்...