- பெலிண்டா
- அபுதாபி
- முப்தலா அபுதாபி ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர்
- பெலிண்டா பென்சிக்
- ஆஷ்லின் க்ரூகர்
- ஐக்கிய மாநிலங்கள்
- க்ரூகர்
அபுதாபி: முபதாலா அபுதாபி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டி அபுதாபியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சிக் (27), அமெரிக்காவின் அஷ்லின் க்ருகர் மோதினர். முதல் செட்டை க்ருகர் கைப்பற்றினார். அதன் பின் ஆச்சரியப்படும் வகையிலான வேகத்தை காட்டிய பென்சிக் அடுத்த இரு செட்களையும் எளிதில் வசப்படுத்தினார்.
இதனால், 4-6, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை பென்சிக் கைப்பற்றினார். அவருக்கு 10 மாதங்களுக்கு முன்புதான் பெண் குழந்தை பிறந்தது. வெற்றிக் கோப்பையை பெற்றுக் கொண்ட பென்சிக் பெலிண்டா கோப்பையை ஒரு கையில் வைத்துக் கொண்டு, மறு கையில் குழந்தையை கொஞ்சி முத்தமிட்டு மகிழ்ந்தார்.
The post ஒரு கையில் கோப்பை மறு கையில் குழந்தை: வெற்றி மங்கை பெலிண்டா உற்சாகம் appeared first on Dinakaran.