- மதுராந்தகம் நகராட்சி சுகாதார மையம்
- மதுராந்தகம்
- கோட்டாட்சியர் ரம்யா
- தாலுகாட்சியர் கணேசன்
- மோச்சேரி சாலை
- தின மலர்
மதுராந்தகம்: மதுராந்தகம் நகருக்கு உட்பட்ட மோச்சேரி சாலையில் உள்ள அரசு மருத்துவமனையை மதுராந்தகம் கோட்டாட்சியர் ரம்யா, வட்டாட்சியர் கணேசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள், இருப்பில் உள்ள மருந்து மாத்திரைகள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது, மருத்துவர்கள் குறித்த நேரத்திற்கு வரவேண்டும் அறிவுரை வழங்கினர். மேலும், இந்த மருத்துவமனை மதுராந்தகம் நகருக்குள் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. அதற்கான கட்டிட பணிகள் நடைபெறும் இடத்தையும் அவர்கள் பார்வையிட்டனர்.
The post மதுராந்தகம் நகராட்சி சுகாதார நிலையத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.