×

மக்களையும் பத்திரிகையாளரையும் முதலில் சந்திக்கட்டும்; விஜய்யை பட்டிதொட்டி எங்கும் பிரபலப்படுத்தியவர் விஜயகாந்த்: பிரேமலதா சொல்கிறார்

மதுரை:விஜய்யை பட்டி தொட்டி எல்லாம் பிரபலப்படுத்தியவர் விஜயகாந்த். அவர் மக்களையும் பத்திரிகையாளரையும் முதலில் சந்திக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

மதுரையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும். அப்பொழுது தான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். நடிகர் விஜய்யை தமிழகம் முழுவதும் பட்டி, தொட்டி முழுவதும், செந்தூரப்பாண்டி படம் மூலம் விஜயகாந்த் கொண்டு போய் சேர்த்தார். சினிமா வேறு, அரசியல் வேறு. அறையில் இருந்து கொண்டு பேசுவதை விட்டுவிட்டு பொதுவெளியில் வந்து மக்களை, பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும். மக்கள் பிரச்னையை கையில் எடுக்க வேண்டும். அப்போதுதான் அரசியலில் நிலைத்து நிற்க முடியும். நடிகர் விஜய் யாருடன் கூட்டணி, யாரோடு வரப் போகிறார், அதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

திருப்பரங்குன்றத்தில் இன்று நேற்றல்ல இந்துக்களும், இஸ்லாமியர்களும் அண்ணன் தம்பியாக எத்தனையோ வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இத்தனை வருடம் வராத புது பிரச்னை இப்போது ஏன் வருகிறது? இதற்கு பின்னே முற்றிலும் அரசியல் இருக்கிறது. மதத்தை, ஜாதியை பிரித்து அரசியல் பண்ண பார்க்கிறார்களே ஒழிய, உண்மையில் சகோதர சகோதரிகளாக வாழ்கின்ற இந்துக்கள் மத்தியிலும் இஸ்லாமியர்கள் மத்தியிலும் எந்த பிரிவினையும் இல்லை. பாஜவுடன் கூட்டணி என்ற ஒரு எண்ணம் எங்களுக்கு கிடையாது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. எப்படி எல்லாமோ அரசியலில் மாற்றம் வரலாம். யார் யாருடன் கூட்டணி என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

The post மக்களையும் பத்திரிகையாளரையும் முதலில் சந்திக்கட்டும்; விஜய்யை பட்டிதொட்டி எங்கும் பிரபலப்படுத்தியவர் விஜயகாந்த்: பிரேமலதா சொல்கிறார் appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Vijayi ,Premalatha ,MADURAI ,VIJAYAKANT ,VIJAYYAYA ,Demutika Secretary General ,Madura ,
× RELATED உயர் நீதிமன்ற உத்தரவை என்எல்சி...