- ராதாகிருஷ்ணன்
- மின்சார வாரியம்
- சமயமூர்த்தி
- உயர் கல்வித் துறை
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- உயர்
- கல்வி
- துறை
- பிரதம செயலாளர்
- முருகனன்
- தின மலர்
சென்னை: பல்வேறு துறைகளை சேர்ந்த 38 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மின்வாரிய தலைவராக ராதாகிருஷ்ணனும், உயர்கல்வி துறை செயலராக சமயமூர்த்தியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தலைமைச்செயலர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
கால்நடை பராமரிப்பு (ம) மருத்துவ பணிகள் இயக்ககம் முன்னாள் இயக்குநராக இருந்த மகேஸ்வரி ரவிக்குமார் கைத்தறி இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக முன்னாள் மேலாண்மை இயக்குநராக இருந்த அண்ணாதுரை பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டு ஆணையரகாவும், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டு ஆணையராக இருந்து வரும் வினீத் தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அரசு சிறப்பு செயலாளராக இருந்து வரும் கலை அரசி பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு சிறப்பு செயலாளராகவும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு சிறப்பு செயலராக இருந்து வரும் சுரேஷ்குமார் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தொழிற்கல்வி இயக்குநரகம் முன்னாள் இயக்குநராக இருந்த ஆபிரகாம் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையராகவும், பேரூராட்சிகளின் இயக்ககம் இயக்குநராக இருந்து வரும் கிரண் குராலா தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநராகவும், பெருநகர போக்குவரத்து கழக முன்னாள் மேலாண்மை இயக்குநராக இருந்த ஆல்பி ஜான் வர்கீஸ் தமிழ்நாடு மின்விசை உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநராகவும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ) உறுப்பினர் செயலராக இருந்து வரும் அன்சுல் மிஸ்ரா தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்து வரும் சு.பிரபாகர் சென்னை பெருநகர வளர்ச்சி கழகத்தின் உறுப்பினர் செயலராகவும், கோவை மாவட்ட ஆட்சியராக இருந்து வரும் கிராந்தி குமார் பாடி தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநராகவும், தலைமைச்செயலரின் அலுவக அரசு இணை செயலராக இருந்து வரும் பவன் குமார் கிரியப்பனவர் கோவை மாவட்ட ஆட்சியராகவும், சேலம் மாநகராட்சி ஆணையராக இருந்து வரும் ரஞ்சித் சிங் தேனி மாவட்ட ஆட்சியராகவும் தேனி மாவட்ட ஆட்சியராக இருந்து வரும் ஷஜிவனா சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அரசு கூடுதல் செயலராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல், செங்கல்பட்டு சார் ஆட்சியராக இருந்து வரும் நாராயண சர்மா செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியராகவும் (வளர்ச்சி), பொன்னேரி சார் ஆட்சியராக இருந்து வரும் சங்கத் பல்வந்த் வாகே கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியராகவும், சேலம் மேட்டூர் சார் ஆட்சியராக இருந்து வரும் பொன்மணி சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியராகவும், பொள்ளாச்சி சார் ஆட்சியராக இருந்து வரும் கேத்தரின் சரண்யா தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியராகவும், சேரன்மகாதேவி சார் ஆட்சியராக இருந்து வரும் ஜெயின் ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியராகவும், சிறப்பு முயற்சிகள் துறை அரசு முதன்மை செயலராக இருந்து வரும் ஹர் சகாய் மீனா ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், பொதுப்பணி துறை அரசு கூடுதல் தலைமை செயலராக இருந்து வரும் மங்கத் ராம் சர்மா நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலராகவும், பள்ளி கல்வி துறை செயலராக இருந்து வரும் மதுமதி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலராகவும், மனித வள மேலாண்மை துறை செயலராக இருந்து வரும் சமயமூர்த்தி உயர்கல்வி துறை செயலராகவும், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மீன்வளம் – மீனவர் நலத்துறை செயலராக இருந்து வரும் சத்ய பிரதா சாஹூ கூட்டுறவு உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு துறை செயலராகவும்,
கூட்டுறவு துறை செயலராக இருந்து வரும் ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு மின் வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மான கழக மேலாண்மை இயக்குநர் /தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர். இவைமட்டுமல்லாது, தமிழ்நாடு மின் வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மான கழக மேலாண்மை இயக்குநர்/ தலைவராக இருந்து வரும் நந்தகுமார் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராகவும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக இருந்து வரும் சுப்பையன் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மீன்வளம் – மீனவர் நலத்துறை செயலராகவும்,
தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலராக இருந்து வரும் குமார் ஜெயந்த் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலராகவும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலராக உள்ள பிரஜேந்திர நவ்நீத் டிஜிட்டல் சேவைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலராகவும், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலராக உள்ள செந்தில்குமார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலராகவும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலராக உள்ள சுப்ரியா சாஹூ சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், தமிழ்நாடு – புதுச்சேரி மக்கள் தொகை கணக்கு முன்னாள் இயக்குநராக இருந்த ச்ஜ்ஜன் சிங் ரா.சவான் பொதுத்துறை அரசு சிறப்பு செயலராகவும், நீர்வளத்துறை செயலராக இருந்து வரும் மணிவாசன் சுற்றுலாத்துறை செயலராகவும், சுற்றுலாத்துறை செயலராக இருந்து வரும் சந்திரமோகன் பள்ளிக்கல்வி துறை செயலராகவும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையராக இருந்து வரும் பிரகாஷ் மனித வள மேலாண்மை துறை செயலராகவும், உயர்கல்விதுறை செயலராக இருந்து வரும் கே.கோபால் சிறப்பு முயற்சிகள் துறை செயலராகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையராக இருந்து வரும் வெங்கடேஷ் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவராகவும், தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் துணை தலைவராக இருந்த ஜெயகாந்தன் பொதுப்பணி துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
The post பல்வேறு துறைகளை சேர்ந்த 38 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மின் வாரிய தலைவராக ராதாகிருஷ்ணன் நியமனம், உயர்கல்வி துறை செயலராக சமயமூர்த்தி நியமனம்: அரசு உத்தரவு appeared first on Dinakaran.