×

மதுரை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் தட்டில் போடும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்கக் கூடாது என அறிவுறுத்தல்

மதுரை: மதுரை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் தட்டில் போடும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்கக் கூடாது. உடனுக்குடன் அவற்றை உண்டியலில் செலுத்த வேண்டும் என கோயில் செயல் அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அந்த சுற்றறிக்கையில்; மதுரை நகர், நேதாஜி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு தண்டயுதபாணி சுவாமி திருக்கோயிலில் அர்ச்சகர்களின் தட்டில் பக்தர்களால் போடப்படும் காணிக்கையினை உண்டியலில் செலுத்த உத்திரவிடப்படுகிறது.

இவ்வாறு அர்ச்சகர்கள் தட்டில் வரப்பெறும் காணிக்கைகள் உண்டியலில் செலுத்தும் பணியினை திருக்கோயில் மணியம் மற்றும் காவலர்கள் கவனித்தல் வேண்டும் எனவும், தட்டு காணிக்கை உண்டியலில் செலுத்தாத அர்ச்சகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

The post மதுரை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் தட்டில் போடும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்கக் கூடாது என அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Madurai Dandayudapani Swami Temple ,Madurai ,Madurai Dandayudhapani Swami ,Temple ,Madurai Nagar ,Netaji Road ,Madurai Dandayudhapani Swami Temple ,
× RELATED மதுரை எழுமலை கிராமத்தில் கிடா முட்டு...