×

சிறையில் இருந்து 4,000 பேர் தப்பியோடிய நிலையில் 162 பெண் கைதிகளை பலாத்காரம் செய்து எரித்து கொன்ற ஆண் கைதிகள்: காங்கோ நாட்டில் அட்டூழியம்

காங்கோ: காங்கோ சிறையில் இருந்து 4,000 பேர் தப்பியோடிய நிலையில், 162 பெண் கைதிகளை பலாத்காரம் செய்து ஆண் கைதிகள் எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் காங்கோ நாட்டின் கோமா நகரை எம்23 என்ற தீவிரவாத குழுக்கள் கைப்பற்றிது. அந்த நாட்டின் ராணுவத்திற்கும், தீவிரவாத குழுக்களுக்கும் இடையே நடந்த சண்டையில் கிட்டத்தட்ட 3,000 பேர் கொல்லப்பட்டனர். அதனால் உடனடியாக இரு தரப்புக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வந்தது.

முன்னதாக இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் போது கோமா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆண் கைதிகள் அங்கிருந்து தப்பியோடினர். அதற்கு முன்னதாக சிறைக்கு தீ வைத்தனர். கைதிகள் சிறையில் இருந்து தப்பிச் செல்லும் முன்பாக பெண்கள் சிறை பகுதிக்கு சென்று அங்கு அடைக்கப்பட்டிருந்த 150க்கும் மேற்பட்ட பெண் கைதிகளை பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 165 பெண் கைதிகளில் பெரும்பாலோர் சிறைக்கு வைக்கப்பட்ட தீ விபத்தில் பலியாகினர். கிட்டத்தட்ட பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண் கைதிகள் அனைவரும் தீ வைத்து கொளுத்தப்பட்டனர்.

ஒன்பது முதல் 13 பெண் கைதிகள் மட்டுமே உயிருடன் தப்பினர். அவர்களும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். பெண் கைதிகள் பலாத்காரம் செய்யப்பட்டு எரிக்கப்பட்ட விவகாரத்தில் உள்நாட்டு நீதித்துறை அதிகாரிகளின் விசாரணை அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. ஆனால் ஐ.நா தரப்பில் எடுக்கப்பட்ட புள்ளி விபரங்கள் சரியானதாக இருக்கிறது. ஆண் கைதிகள் தப்பியோடி விவகாரத்தில் சிறைக் காவலர்களும் அடித்துக் கொல்லப்பட்டனர். சம்பவம் நடந்த நாளில் 4,000க்கும் மேற்பட்ட ஆண் கைதிகள் முசென்ஸ் சிறையை விட்டு தப்பியோடிவிட்டனர்.

இப்போது அந்த சிறை முழுவதும் காலியாக உள்ளது. இடிபாடுகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. காட்டுமிராண்டித்தனமான இந்த குற்றம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காங்கோ நாட்டில் கொலைகள், பலாத்கார சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன’ என்றார். இதுகுறித்து ஐ.நா மனித உரிமைகளுக்கான செய்தித் தொடர்பாளர் ஜெர்மி லாரன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘தெற்கு கிவுவில் காங்கோ படையினரால் 52 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.

The post சிறையில் இருந்து 4,000 பேர் தப்பியோடிய நிலையில் 162 பெண் கைதிகளை பலாத்காரம் செய்து எரித்து கொன்ற ஆண் கைதிகள்: காங்கோ நாட்டில் அட்டூழியம் appeared first on Dinakaran.

Tags : Congo ,Como ,Dinakaran ,
× RELATED மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில்...