×

அரியலூர் எஸ்பி அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு உறுதியேற்பு

 

அரியலூர், பிப். 8: அரியலூர் மாவட்ட காவல்துறையினர் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றனர். ஆண்டுதோறும் பிப்ரவரி 9 ந்தேதி கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளரகள் முத்தமிழ்ச்செல்வன் ,(தலைமையிடம்) மற்றும் விஜயராகவன் (மதுவிலக்கு அமல் பிரிவு) முன்னிலையில் கொத்தடிமை தொழிலாளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன்படி, கொத்தடிமை தொழிலாளர் முறை எந்தத் தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன் என்றும், கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறுவாழ்வுக்காக பணியாற்றுவேன் என்றும், கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயல்படுவேன் என்றும் காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். மேலும்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி, மாவட்ட ஆயுதப்படை மற்றும் காவல் நிலையங்களிலும் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி கடைபிடிக்கப்பட்டது.

The post அரியலூர் எஸ்பி அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு உறுதியேற்பு appeared first on Dinakaran.

Tags : Ariyalur SP ,Ariyalur ,Ariyalur district police ,Bonded Labour Abolition Day ,Ariyalur district ,Dinakaran ,
× RELATED வெயிலில் சோர்வின்றி பணியாற்ற...