×

புதுச்சேரி மாநில கல்லூரி மாணவிகளின் விவசாய கண்காட்சி

 

நாகப்பட்டினம்,பிப்.8: புதுச்சேரி மாநில பஜன்கோவா கல்லூரி சார்பில் நாகப்பட்டினம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விவசாய கண்காட்சி நடந்தது. புதுச்சேரி மாநிலம் பஜன்கோவா கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவிகளால் விவசாய கண்காட்சி நடத்தப்பட்டது. பஜன்கோவா கல்லூரி முனைவர் புஷ்பராஜ் தலைமை வகித்தார். வேளாண் உதவி இயக்குநர் ஸ்ரீமதி. சரோஜினி, ஆகியோர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர். இந்த கண்காட்சியில் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

 

The post புதுச்சேரி மாநில கல்லூரி மாணவிகளின் விவசாய கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Puducherry State College ,Nagapattinam ,Assistant Director of ,Puducherry State Bhajangow College ,Bhajangow College ,Puducherry ,Dr. ,Pushparaj ,Dinakaran ,
× RELATED நாகை வெளிப்பாளையத்தில் பலமுறை...