×

வள்ளலார் நினைவு தினம் பிப்.11ல் டாஸ்மாக் விடுமுறை

மதுரை, பிப். 8: வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு பிப்.11ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது: மாவட்டத்தில் உரிமம் பெற்று இயங்கி வரும் டாஸ்மாக் சில்லறை விற்பனை மது கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், உரிமம் பெற்ற உரிம தலங்கள் அனைத்தும் பிப்.11ம் தேதி வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு மூடப்பட்டிருக்கும். அன்றைய நாளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது. மேலும், அன்றைய தினத்தில் விதிகளுக்கு மாறாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வள்ளலார் நினைவு தினம் பிப்.11ல் டாஸ்மாக் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : TASMAC ,Vallalar's memorial day ,Madurai ,Dinakaran ,
× RELATED பைக்கை வழிமறித்து வாலிபர்...