திண்டுக்கல், பிப். 8: திண்டுக்கல் தனியார் கல்லூரியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடின. போட்டிகள் நாக் அவுட் முறையில் நடந்தது. இறுதி போட்டியில் திண்டுக்கல் ஞானம் மெமோரியல் அணி, எஸ்எஸ்எம். கல்லூரி அணியை 4:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி முதல்வர் சம்பத்குமார் தலைமை வகித்து வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு மற்றும் கோப்பையை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் ஜெயக்குமார், கவுதமன் செய்திருந்தனர்.
The post திண்டுக்கல்லில் கால்பந்து போட்டி appeared first on Dinakaran.