×

நிலம் ஒதுக்கீடு விசாரணை ஒத்திவைப்பு

ஓமலூர், பிப்.8: ஓமலூரில் கோட்டை மாரியம்மன் கோயில் அருகே சங்ககிரி சாலையில் உள்ள ரயில்வே கேட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் மேம்பாலம் கட்டப்பட்டது. இதற்காக 30 சென்ட் கோயில் நிலம் எடுக்கப்பட்டது. இந்த நிலத்திற்கு ஈடாக அருகில் நிலம் வழங்க வேண்டுமென கேட்டு கோயில் தர்மகர்த்தா ராமகிருஷ்ணன் நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்ற உத்தரவுபடி கோயிலுக்காக பல்பாக்கி கிராமத்தில் 30 சென்ட் நிலம் வழங்கப்பட்டது. ஆனால், 7 கி.மீ., தொலைவில் இருப்பதால், திருவிழா காலங்களில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோயிலுக்கு கூட்டம் அதிகமாக வருவதால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, கோயில் அருகிலேயே நிலம் வழங்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணைக்கு கோயில் செயல் அலுவலர் புனிதராஜ், தர்மகர்த்தா ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் ஆஜராகினர். தாசில்தார் ரவிக்குமார் விசாரித்தார். தொடர்ந்து 14ம் தேதிக்கு மீண்டும் விசாரிப்பதாக தெரிவித்து ஒத்தி வைத்தார்.

The post நிலம் ஒதுக்கீடு விசாரணை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Omalur ,Sangakiri Road ,Fort Mariamman Temple ,Dinakaran ,
× RELATED மது விற்ற பெண் உட்பட 3 பேர் கைது