×

மிரட்டி பணம் பறிக்க முயன்றது அம்பலம் அரியானா பா.ஜ தலைவர் மீதான பலாத்கார வழக்கு ரத்து: பெண் உள்பட 6 பேர் அதிரடி கைது


சிம்லா: அரியானா மாநில பா.ஜ தலைவராக இருப்பவர் மோகன்லால் படோலி. இவர் மீதும், பாடகர் ராக்கி மிட்டல் மீதும் இமாச்சல் போலீசார் கூட்டு பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்தனர். டெல்லியில் இருந்து இமாச்சல் சென்ற பெண்களை மிரட்டி அரசு வேலை வாங்கித்தருவதாகவும், பாடகியாக்குவதாகவும் ஆசை காட்டி பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த இமாச்சல் போலீசார் விசாரணை நடத்திய போது, பெண் கொடுத்த புகார் போலியானது என்பது தெரிய வந்தது.

விசாரணையில் பாடகர் ராக்கி மிட்டலை மிரட்டி ரூ.50 லட்சம் பணம் பறிக்க முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து பலாத்கார புகார் கொடுத்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் உள்பட 6 பேரை கைது செய்தனர். மேலும் அரியானா பாஜ தலைவர் மோகன் லால் படோலி மற்றும் பாடகர் ராக்கி மிட்டல் ஆகியோர் மீதான கூட்டுப் பலாத்கார வழக்கை ரத்து செய்து, அந்த அறிக்கையை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

 

The post மிரட்டி பணம் பறிக்க முயன்றது அம்பலம் அரியானா பா.ஜ தலைவர் மீதான பலாத்கார வழக்கு ரத்து: பெண் உள்பட 6 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Ambalam Haryana BJP ,Mohanlal Patoli ,Haryana ,BJP ,Himachal police ,Rakhi Mittal ,Himachal ,Delhi ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது