- NR காங்கிரஸ்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- 2026 சட்டமன்றத் தேர்தல்
- புதுச்சேரி
- முதல் அமைச்சர்
- ரங்கசாமி
- ஆர் காங்கிரஸ் கட்சி
- ECR
புதுச்சேரி: என்ஆர் காங்கிரஸ் கட்சியின் 15ம் ஆண்டு துவக்க விழா நேற்று இசிஆரில் உள்ள என்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான ரங்கசாமி பேசுகையில், ‘என்ஆர் காங்கிரஸ் தமிழகத்திலும் போட்டியிட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வருகிறது. காமராஜர் கொள்கை அடிப்படையில் புதுச்சேரியில் ஆட்சி நடைபெறுவதுபோல் தமிழகத்திலும் ஆட்சி வர வேண்டும் என்று கேட்கிறார்கள். வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திலும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் வாய்ப்புள்ளது.
என்ஆர் காங்கிரஸ் கட்சி மீது புதுவை மக்கள் மட்டுமல்லாமல் தமிழக மக்களும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். 2026 சட்டமன்ற தேர்தலிலும் புதுச்சேரியில் கூட்டணி கட்சி ஆதரவோடு பெரிய வெற்றியை பெற்று ஆட்சியை பிடிப்போம். இவ்வாறு அவர் பேசினார். அப்போது அங்கிருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆவேசமாக முழக்கமிட்டதோடு, கைதட்டி ஆரவாரம் செய்தனர். பாஜவுடன் கூட்டணி தொடருமா? முதல்வர் ரங்கசாமியிடம், 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடருமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி, ‘அப்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும்’ என பதிலளித்தார்.
The post 2026 சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தமிழகத்தில் போட்டி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.
