×

கோபி அரசு மருத்துவமனைக்கு லக்‌ஷயா தேசிய தரச்சான்று

*அமைச்சர் விருது வழங்கினார்

கோபி : கோபி அரசு மருத்துவமனைக்கு லக்‌ஷயா தேசிய தரச்சான்று பெற்றதை தொடர்ந்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் விருது வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் கோபி அரசு மருத்துவமனைக்கு கோபி மட்டுமின்றி, சத்தி, தாளவாடி, நம்பியூர், குன்னத்தூர், டி.என்.பாளையம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்தும் நாள் தோறும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகளும், 200க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்கு கடந்த சில ஆண்டுகளாக பிரசவங்கள் அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து சுமார் 7 கோடியில் 3 மாடிகளில் 90 படுக்கையுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

தரை தளத்தில் கர்ப்பிணிகளுக்கான பேறு கால முன்கவனிப்பு, பதிவு அறை,பிரசவ பகுதி,ஸ்கேன் வசதி, குடும்ப நல அறுவை சிகிச்சை,பிரசவத்திற்கு பின் கவனிப்பு பிரிவும் செயல்பட்டு வருகிறது.2வது மாடியில் குடும்ப கட்டுப்பாடு மற்றும் பிரசவத்திற்காக ஆபரேசன் தியேட்டர் உள்ளது.

இங்கு பேறுகால மருத்துவர்கள் 5 பேர் உள்பட 20 பேர் பணியில் உள்ளனர். 47 செவிலியர்கள் பணியில் உள்ளனர். இங்கு மாதந்தோறும் 80 முதல் 110 பிரசவங்கள் நடைபெறுகிறது.

ஆண்டுதோறும் லக்‌ஷயா தேசிய தர ஆய்வு குழுவினர் வார்டின் சுகாதாரம், நோயாளிகளுக்கான அடிப்படை வசதி,கர்ப்பிணிகளுக்கான தனியறை, அங்கு உள்ள வசதிகள், உபகரணங்கள்,தடையற்ற மின்சாரம், மருத்துவர்கள்,செவிலியர்கள் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்வர்.

இந்நிலையில் நவீன கருவிகளுடன் அறுவை அரங்குகள் அமைக்கப்பட்ட நிலையில், லக்‌ஷயா தேசிய தர ஆய்வு குழுவினர் ஆய்வு செய்து 96 மதிப்பெண் வழங்கினர். இதையடுத்து
சென்னையில் நடந்த விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், கோபி அரசு மருத்துவமனை பிரசவ வார்டு பொறுப்பு மருத்துவர் டாக்டர்.

ரேணுகா ரஞ்சன் மற்றும் செவிலியர் சீதாலட்சுமி ஆகியோரிடம் வழங்கினார். மருத்துவமனையை தேசிய தரச்சான்று பெறும் அளவிற்கு தயார் செய்த டாக்டர்கள் கல்யாணி ரேணுகாரஞ்சனை நோயாளிகள் பாராட்டினர்.

The post கோபி அரசு மருத்துவமனைக்கு லக்‌ஷயா தேசிய தரச்சான்று appeared first on Dinakaran.

Tags : Gopi Government Hospital ,Gopi ,Tamil Nadu ,Public Health Minister ,M. Subramaniam ,Sathi ,Thalavadi ,Nambiyur ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட...