×

ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 

தேனி, பிப்.7: தேனி -அல்லி நகரத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி-அல்லிநகரம் பஸ் நிறுத்தம் அருகே அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் நேற்று மாலை மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் ஜெயபாண்டி தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தின்போது, தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தம் செய்த மத்திய அரசினைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில், ஏஐடியுசி, சிஐடியு, எல்பிஎப், ஏஐயுடியுசி, டியுசிசி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Theni ,Theni-Alli Nagar ,Theni-Alli Nagaram ,Central Government ,CITU ,Dinakaran ,
× RELATED மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்