×

தஞ்சை உழவர் சந்தையில் வாழைப்பழம் விலை உயர்வு

தஞ்சாவூர், பிப்.7: தஞ்சை உழவர் சந்தையில் வாழைப்பழம் விலை உயர்ந்துள்ளது. தஞ்சை -நாஞ்சிக்கோட்டை சாலையின் மைய பகுதியில் உள்ள உழவர் சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். அதேபோல வாழைத்தார், வாழை இலை, வாழைப்பூ, வாழைத்தண்டு உள்ளிட்டவையும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.கடந்த வாரம் உழவர் சந்தைக்கு 5 டன் முதல் 6 டன் வரை வாழைப்பழங்களை விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்தனர் ஆனால் நேற்று அதன் வரத்து மிகவும் குறைந்து 3 டன் மட்டுமே வாழைப்பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.

வரத்து குறைந்ததால் கடந்த வாரத்தை விட நேற்று வாழைப்பழங்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. கடந்த வாரம் ரூ.40க்கு விற்கப்பட்ட பச்சைநாடன் ரூ.50க்கு விற்பனையானது. பூவன் பழம் கிலோ ரூ.50, கற்பூரவள்ளி ரூ.50, ரஸ்தாலி ரூ.60, செவ்வாழைப்பழம் ரூ.100 என விற்பனை செய்யப்பட்டது. இதில் பூவன் பழம் கடந்த வாரம் ரூ.30க்கு விற்பனையானது. கடந்த வாரம் நுனி வாழை இலை ஒன்று ரூ.3க்கு விற்கப்பட்டது நேற்று அதன் விலை ரூ.5 ஆக உயர்ந்தது.

The post தஞ்சை உழவர் சந்தையில் வாழைப்பழம் விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Tanji ,Thanjai-Nanchikottai Road ,Market ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா