×

புதுக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் லஷ்மி ஹயக்ரீவர் கல்வி சங்கல்ப பூஜை

புதுக்கோட்டை, பிப்.7: புதுக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் லஷ்மி ஹயக்ரீவர் கல்வி சங்கல்ப பூஜை நடந்தது. இதில் ஏராளமான மாணவர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை தெற்கு, 4ம் வீதி மார்கெட் சந்திப்பிலுள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில்  லஷ்மி ஹயக்ரீவர் கல்வி சங்கல்ப பூஜை நடைபெற்றது. அரசு பொது தேர்வு 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் பல்வேறு தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட கல்வி சங்கல்ப பூஜை நடைபெற்றது. இதையொட்டி ஆலயத்திலுள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ லெட்சுமி ஹயக்ரீவர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை ஹோமம் மகா தீபாராதனை நடைபெற்றது. மாணவ, மாணவிகளுக்கு வட்டார கல்வி அலுவலர் பிரியா, ஆசிரியர்கள் கல்லூரி பேராசிரியர்கள் மாலதி, சிவக்குமார், சரவணகுமாரி உள்ளிட்டோர் கல்வி விழிப்புணர்வு கருத்துக்கள் தேர்வு எழுதும் வழி முறைகளை பற்றியும் அறிவுரைகள், வழங்கினர்.

இதையொட்டி, மாணவ, மாணவிகளுக்கு கல்வி எழுது பொருட்கள், குறிப்பேடுகள் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கலந்து கொண்ட தேர்வில் சிறப்பாக மதிப்பெண் பெறுகின்றவர்களுக்கு அனுமன் திருச்சபையினர் 12 ஆண்டுகளாக விருதுகள், மாணவ, மாணவிகளுக்கு வழங்கி வருகின்றனர். இதில் சுமார் 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, அனுமன் திருச்சபையினர், ஆனந்தன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர். அனைவருக்கும் அருட் பிரசாதம் வழங்கப்பட்டது.

The post புதுக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் லஷ்மி ஹயக்ரீவர் கல்வி சங்கல்ப பூஜை appeared first on Dinakaran.

Tags : Lakshmi Hayagrivar Kalvi ,Sankalpa ,Pooja ,Pudukkottai Anjaneyar ,Temple ,Pudukkottai ,Lakshmi Hayagrivar Kalvi Sankalpa Pooja ,Sri Anjaneyar Temple ,Market Junction, 4th Street, Pudukkottai South… ,Lakshmi Hayagrivar ,Kalvi Sankalpa Pooja ,Anjaneyar Temple ,
× RELATED திருச்சுழியில் கோயிலில் விளக்கு பூஜை