பெரம்பலூர், பிப்.7:பெரம்பலூர் நகர்பகுதியில் தொடர்ச்சியாக நடை பெற்று வரும் கொள்ளை சம்பவங்களை தடுக்க வேண்டும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாவட்ட எஸ்பி, டிஎஸ்பி ஆகியோரி டம் கோரிக்கை மனு நேற்று அளிக்கப்பட்டது. எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் முஹம்மது ரபீக் தலைமை வகித்தார். பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா, பெரம்பலூர் டிஎஸ்பி ஆரோக்கியராஜ் ஆகியோரை சந்தித்து அளித்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் நகர்புறப் பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் மிகுந்த அச் சத்தில் வசித்து வருகின்றனர். இரவுரோந்து பணிக்கு கூடுதலாக போலீசாரை நியமித்து மாவட்டத் தலை நகரான பெரம்பலூரை தொடர் கண்காணிப்பில் காவல்துறையினர் வைத் திருக்க வேண்டும்.
கொள்ளையர் நடத்தி வரும் தொடர் கொள்ளை சம்ப வங்களுக்கு போலீசார் முற்றுப்புள்ளி வைக்கா விட்டால், பொதுமக்கள் இருக்கும்போதே துணிகர கொள்ளையில் ஈடுபடும் அபாயம் உள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்ட எஸ்பி துரித நடவடிக்கை எடுத்து, அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த நடவடிக்கை எடுப்பதோடு, கொள்கை சம்பவங்களில் ஈடுபட்டு வரும் நபர்களைக் கண்ட றிந்து, அவர்கள் ஜமீனில் வெளிவர முடியாதபடிக்கு வழக்கு பதிவுசெய்து சிறை யில் அடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த கோரிக்கை மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியின்போது, எஸ்டிபிஐ கட்சியின் பெரம்பலூர் மாவட்ட பொது செயலாளர் செய்யது அபுதாஹிர், மாவட்ட துணைத் தலைவர் முஹம்மது பாரூக், மாவட்ட செயலாளர்கள், அபுபக்கர் சித்தீக், அஸ்கர்அலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாஜஹான், வி.களத்தூர் பொறுப்பாளர் முஹம்மது ஆகியோர் உடன் இருந்தனர்.
The post பெரம்பலூர் பகுதியில் கொள்ளை சம்பவங்களை தடுக்க வேண்டும் appeared first on Dinakaran.
