- பெரம்பலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலகு
- பெரம்பலூர்
- பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு
- பெரம்பலூர் மாவட்டம்
- கலெக்டர்
- கிரேஸ் பச்சாவ்
- தமிழ்நாடு…
- தின மலர்
பெரம்பலூர், பிப். 7: பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் உள்ள தற்காலிக பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தகவல். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ், மிஷன் வாட்சாலயா வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி, மாவட்டக் கலெக்டரை தலைவராகக் கொண்டு இயங்கிவரும், பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில், 1 பாதுகாப்பு அலுவலர் நிறுவனம் சாராதது தற்காலிக பணியிடம், சிறப்பு சிறார் காவல் அலகில் 2 சமூகப் பணியாளர் மற்றும் தற்போது காலியாக உள்ள மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் 1 உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர் தற்காலிக பணியிடம் நிரப்பிட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன.
பாதுகாப்பு அலுவலர் நிறுவனம் சாராதது பதவிக்கு (1 பணியிடம் – 1 வருடகால ஒப்பந்த அடிப்படையில்) 42 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வித் தகுதி அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் முதுகலை சமூகப்பணி சமூகவியல் குழந்தைகள் வளர்ச்சி மனித உரிமை பொது நிர்வாகம் உளவியல், மனநலம், சட்டம் பொது சுகாதாரம் சமூகவள மேலாண்மை (ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை படித்திருக்க வேண்டும். அல்லது அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இளங்கலை சமூகப்பணி சமூகவியல் குழந்தைகள் வளர்ச்சி மனித உரிமை பொது நிர்வாகம, உளவியல், மனநலம் சட்டம், பொது சுகாதாரம் சமூகவள மேலாண்மை, பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி களப்பணியில் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை, சமூகநலம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை படித்திருக்க வேண்டும் மற்றும் திட்டங்கள் உருவாக்குவதில் 2 ஆண்டுகள் முன் அனுபவம், மேலும் கணினி இயக்குவதில் திறமை வாய்ந்தவராக இருத்தல் வேண்டும். ஒரு மாதத்திற்கு ரூ27,804 தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
சமூகப்பணியாளர் பதவிக்கு (2 பணியிடம் – 1 வருடகால ஒப்பந்த அடிப்படையில்) 42 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி (சமூகப்பணி) / (சமூகவியல்) (சமூகஅறிவியல்) அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் ஏதேனும் ஒன்றை படித்திருக்க வேண்டும். மேலும் தகுதி ஆகும். ஒருமாதத்திற்கு ரூ.18,536/- தொகுப் பூதியமாக வழங்கப்படும். உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர் பதவிக்கு (1 பணியிடம் – 1 வருடகால ஒப்பந்த அடிப்படையில்) 42 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி மற்றும் தகுதி ஆகும். ஒருமாதத்திற்குரூ.13,240/- தொகுப்பூதியமாக வழங் கப்படும். இப்ப பணியிடங் களுக்கான விண்ணப்பத் தினை https://perambalur.nic.in என்ற மாவட்ட இணையதள முகவரியிலிருந்து பதி விறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப் பத்தினை வருகிற 14ஆம் தேதிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இரண்டாவது தளம், எம்.எம்.பிளாசா, திருச்சி மெயின்ரோடு, பெரம்பலூர் மாவட்டம் – 621212 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் பணியிடம் குறித்த தகவல்களுக்கு 04328- 275020 என்ற தொலைபேசி எண் மூலமாகவும், மிஷன் வாட்சாலயா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பார்த்தும் தெரிந்து கொள்ளலாம். மேலும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் நகல்கள் இணைக்கப்படாத விண் ணப்பங்கள் நிராகரிக்கப் படும் என மாவட்டக் கலெக்டர் வெளியியுள்ள அறிவிப்பில் தெரிவித்துள் ளார்.
The post பெரம்பலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.